அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - தவெக தலைவர் விஜய்.!



  TVK Vijay on Pongal and Tamil New Year Wish 

உலகத்தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் பொங்கல் 2025 பண்டிகை களைகட்டி இருக்கிறது. போகிப்பண்டிகையைத் தொடர்ந்து, நாளை பொங்கல் பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது. இதனிடையே, பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தவெக தலைவர் விஜய் தெரிவித்து இருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பொங்கல் திருநாள்! உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.

Pongal wish

இலட்சியங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்

2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்!

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகையின்போது சோகம்; வீட்டை சுத்தம் செய்த பெண் பலி.!

இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம். அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிலர் தமிழர் புத்தாண்டு ஏப்ரல் 14 தான் எனவும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், தமிழர் புத்தாண்டு தை / சித்திரை தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. ஆய்வுகளும் இதுதொடர்பாக நடந்து வருகின்றன.

இதையும் படிங்க: விஜயின் இடத்திற்கு ஆசைப்படும் புஸ்ஸி ஆனந்த்? லீக்கான ஆடியோ.. தவெக-வுக்குள் கோஷ்டி?