பொங்கல் பண்டிகையின்போது சோகம்; வீட்டை சுத்தம் செய்த பெண் பலி.!



  in Dharmapuri Woman Dies 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொட்டாவூர் கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன். இவரின் மனைவி சுமதி (வயது 43).

ஜனவரி 12 ம் தேதியான நேற்று, சுமதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டினை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். 

அப்போது, ஏணியில் ஏறிய நிலையில், திடீரென கால் இடறி கீழே விழுந்தார். அச்சமயம் தலையில் படுகாயம் அடைந்தார்.

இதையும் படிங்க: காந்திமதி யானை உடல்நலக்குறைவால் பலி: அண்ணாமலை இரங்கல்.!

death

மரணம் உறுதி

உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் அங்கிருந்த அரசு மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரிப்பனில் இரத்தக்கறை.. இறந்த குழந்தையின் உடலை வைத்து நாடகம்?.! சிக்கிய புதிய சிசிடிவி காட்சி.!!