"எந்த குற்றவாளியையும் தப்பிக்க விடமாட்டோம்" - உதயநிதி ஸ்டாலின் உறுதி.!



Udhayanidhi Stalin on Anna University Case 09 Jan 2025 

 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த கல்லூரி மாணவி, ஞானசேகரன் என்ற நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு இருக்கிறார். நீதிமன்றத்தின் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. 

2025 ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று அவை நடவடிக்கையின்போது, இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது. தமிழ்நாடு அரசும் இதுகுறித்த பதிலை வழங்கியது. 

இதையும் படிங்க: திராவிட மாடல் அரசின் மீது நம்பிக்கை இல்லை - தமிழிசை ஆவேசம்.! 

Udhayanidhi

தமிழ்நாடு அரசு உறுதி

இந்நிலையில், அண்ணா பல்கலை., விவகாரம் குறித்து பேசிய தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி விவகாரத்தில் மிக நெடிய போராட்டத்திற்கு பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

நமது ஆட்சியில் எந்த குற்றவாளியையும் முதல்வர் தப்பிக்க விடமாட்டார். பொள்ளாச்சி விவகாரத்தில் சிபிஐ வந்த பின்னர் தான் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தது. அனைவரும் கொண்டாடும் சமத்துவ பொங்கல் ஜாதி, மதம், ஏற்றத்தாழ்வு இல்லாத பண்டிகை" என கூறினார்.

இதையும் படிங்க: #Breaking: "யார் அந்த சார்" - ஆர்.எஸ் பாரதி பதிலால் பரபரப்பு.!