#Breaking: "யார் அந்த சார்" - ஆர்.எஸ் பாரதி பதிலால் பரபரப்பு.! 



  RS Bharati about Yaar Antha Sir 

2025 ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தமிழ்நாடு அரசு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து நிறைவுபெற்றதும், தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார். இதனால் ஆளுநர் உரை சபாநாயகரால் வாசிக்கப்பட்டு, ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

Anna university

ஆர்.எஸ் பாரதி பேச்சு

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்படுவதாக கூறி, திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டை, பனகல் பகுதியில் திமுக எம்.பிக்கள் கனிமொழி, ஆர்.எஸ் பாரதி, கலாநிதி மாறன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதையும் படிங்க: கோவில் நிலத்தில் வீடு கட்டிய ஞானசேகரன்; வருவாய்த்துறை ஆய்வில் அம்பலம்.!

அப்போது, அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணியை கண்டிப்பதாகவும் போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றன. ஆளுநருக்கு எதிரான கோஷங்கள் அங்கு எழுப்பப்பட்டன. இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் மற்றும் எம்.பி ஆர்.எஸ் பாரதி பேசுகையில், "அண்ணா பகலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில், யார் அந்த சார்? என்று கேட்பவர்கள், அவர்கள் தான் அந்த சார். திமுகவை யாராலும் அழிக்க முடியாது" என பேசினார்.

இதையும் படிங்க: #Breaking: காலையிலேயே பரபரப்பு... 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது..!