மனைவி, மாமியாரை கொன்று சாவகாசமாக கட்டிலில் உட்கார்ந்து போஸ்; பதறவைக்கும் சம்பவம்.!



Uttar Pradesh Kanpur Man Kills Wife and Mother In Law 

வாக்குவாதத்தில் உண்டான சண்டையில், மனைவி-மாமியாரை கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டம், சக்கேரி, பிரண்ட்ஸ் காலனி பகுதியில் வசித்து வருபவர் ஜோசப் பீட்டர் (வயது 52). இவரின் மனைவி காமினி (வயது 39). தம்பதிகளுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமண நடைபெற்ற முடிந்த நிலையில், தற்போது வரை குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக தம்பதிகளிடையே அவ்வப்போது வாக்குவாதமும் நடைபெற்று வந்துள்ளது. 

வாக்குவாதம்

சம்பவத்தன்று தாயின் வீட்டிற்கு சென்று இருந்த மனைவியை, நேரில் பார்க்க பீட்டர் சென்றுள்ளார். அங்கு தனது மனைவி மற்றும் மாமியாருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, வாக்குவாதம் எழுந்துள்ளது.  இதனால் ஆத்திரமடைந்த பீட்டர், கூர்மையான ஆயுதத்தால் இருவரையும் தாக்கி கொடூரமாக கொலை செய்து இருக்கிறார். 

இதையும் படிங்க: 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; காதல் பெயரில் அத்துமீறிய இளைஞர் போக்ஸோவில் கைது.!

Uttar pradesh

கொடூர கொலை

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், தாய்-மகள் இரத்த வெள்ளத்தில் துடிப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின் காவல்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது தனது மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்தவர், கட்டிலில் சாவகாசமாக அமர்ந்து இருந்துள்ளார். 

நடத்தை சந்தேகம்

இதனையடுத்து, பீட்டரை கைது செய்த காவல்துறையினர், கொலையான இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தனது மனைவியின் நடத்தை சந்தேகத்தால் வாக்குவாதம் நடந்ததாகவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொலை செய்தேன் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 

இதையும் படிங்க: 18 வயது பள்ளி மாணவருக்கு எமனான மின்கம்பி; அறுந்து கிடந்தது தெரியாமல் கால் வைத்ததால் சோகம்.!