சென்னை ஐஸ்வர்யா மால்-ஐ வாரித்தூற்றிய பொதுமக்கள்.. ஆபர் அறிவிப்பு கேன்சலால் குமுறும் மக்கள்.. கொக்கரிப்பு.!



chennai-aishwarya-mall-program-offer-cancel

 

சென்னையில் உள்ள அரும்பாக்கம் பகுதியில் ஐஸ்வர்யா மால் உள்ளது. இந்த மாலில் தனியார் சார்பில் குறைந்த விலைக்கு உடைகள், காலணிகள், ஷூக்கள் போன்றவை விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 

மெகா ஆபர் என கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக முழுவீச்சில் பல பிரபலங்களை வைத்து ப்ரோமோஷன் போடப்பட்டுள்ளது. இதனால் நேற்று கடைக்கு முன்பு வாடிக்கையாளர்கள் குவிந்துபோனதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: #Breaking: புதிய உச்சம் தொடப்போகும் தங்கம், வெள்ளி விலை.. இன்று கிடுகிடு உயர்வு.! 

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், முதற்கட்டமாக பெண்களை மட்டும் மாலுக்குள் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், பொருட்கள் தரமின்றி இருந்ததால், பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி இருந்தனர். இதனிடையே, இன்றும் மாலுக்கு வந்த பலரும் அங்கு செல்ல முற்பட்டனர். 

ஆனால், காவல்துறையினர் யாரையுமே உள்ளே அனுமதிக்காத நிலையில், அனைவரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் பொதுமக்கள் மால் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் கடும் விரக்திக்கு உள்ளாகி கொந்தளிப்பில் கடுமையாக வசைபாடி இருந்தனர். 

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பல்வேறு குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. புதுச்சேரி உட்பட வெளிமாநிலத்தில் இருந்து நெடுந்தூரம் பயணம் செய்து வந்தவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றனர். முழுமையான திட்டமிடல் இல்லாமல், அலட்சியத்துடன் செயல்பட்டதால் பலரும் தங்களின் நேரத்தை விரயம் செய்து வந்து ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். 

இதையும் படிங்க: தக்காளியின் விலை திடீர் உயர்வு; கிலோ ரூ.70 க்கு விற்பனை.!

உரிய அனுமதி இன்றி இவ்வாறான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதாக கூறி மக்களை ஏமாற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதே, எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சனைகள் உண்டாகாமல் இருக்க வழிவகை செய்யும் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

வீடியோ நன்றி: பாலிமர் தொலைக்காட்சி