தாய்மார்களே உஷார்.! பால் குடித்த பச்சிளம் குழந்தை.. துடி துடித்து பலி.!



velacherry 23 days small baby died while breast feeding

சென்னை வேளச்சேரி அருகே நன்மங்கலத்தில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ராம்ஜி என்பவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஹரிப்பிரியா என்ற மனைவியும், 10 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். 

கடந்த ஆண்டு ஹரிப்பிரியா மீண்டும் கர்ப்பமான நிலையில் அவருக்கு 23 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று முன்தினம் இரவில் ஹரிப்பிரியா தன்னுடைய இரண்டாவது பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அந்த பச்சிளம் குழந்தைக்கு பால் புரையேறி உள்ளது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு அந்த குழந்தை தவித்தது. 

Velacherry

அதிர்ச்சியடைந்த ஹரிப்பிரியா செய்வதறியாது கத்தி கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து குழந்தையை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இதையும் படிங்க: இனிப்பில் விஷம்..எமனாக மாறிய தாய், தந்தை.. இப்படி ஒரு காரணமா.?!

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதை கேட்ட தாய் ஹரிப்பிரியா கதறி அழுதுள்ளார். இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: "என் பாய் பெஸ்ட்டியை, என்னோடு சேர்த்து வையுங்க போலீஸ்".. குடித்துவிட்டு பெண் ரகளை.!