இனிப்பில் விஷம்..எமனாக மாறிய தாய், தந்தை.. இப்படி ஒரு காரணமா.?!



Virudhunagar family trying to suicide for loan issue

குடும்பத்தையே முடக்கிய பக்கவாத நோய்

விருதுநகர் மாவட்டத்தின், மேட்டுப்பட்டியில் வசித்து வரும் கணேசன் என்பவருக்கு, முத்துக்குமாரி என்ற மனைவியும், குரு பிரியா (வயது 15) என்ற பெண்ணும், சபரிநாதன் (வயது 8) என்ற மகனும் இருக்கின்றனர். முத்துக்குமாரி தையல் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்த கணேசன் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

குழந்தைகளைக் கொன்று, தற்கொலை முயற்சி

அவரின் மருத்துவ செலவு, குடும்ப செலவு என இரண்டு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி குடும்பத்தை சமாளித்து வந்துள்ளனர். முத்துகுமாரியின் சம்பளத்தை வைத்து கடனையும் அடைக்க முடியாமல், குடும்பத்தையும் சமாளிக்க முடியாமல் அவர்கள் மிகுந்த வறுமையில் வாடி வந்தனர். இதனால், நீண்ட நாட்களாகவே அந்த தம்பதி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தது. எனவே குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வது என்று கணேசனும் முத்துக்குமாரியும் முடிவெடுத்தனர்.

இதையும் படிங்க: கணவனின் விபரீத எண்ணத்தால் மனைவி பலி., பிற உயிர்கள் ஊசல்.! கடன் தொல்லை கழுத்தை நெரித்ததால் சோகம்..!

Virudhunagar

விஷம் கலந்த இனிப்பு

அதன்படி, நேற்று காலை தங்களது பிள்ளைகளுக்கு தங்கள் கையாலேயே விஷம் கலந்த இனிப்பை கொடுத்து சாப்பிட வைத்துள்ளனர். அதன் பின்னர், தம்பதிகள் இருவரும் அந்த இனிப்பை சாப்பிட்டு நான்கு பேரும் மயங்கி கிடந்துள்ளனர். எதார்த்தமாக அவர்கள் வீட்டிற்கு சென்ற பக்கத்து வீட்டுக்காரர் இதை கவனித்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை மீட்டு ராஜபாளையம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

பறிபோன உயிர்

அப்போது முத்துக்குமாரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கணேசன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பிள்ளைகள் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் கடன் வாங்கி அதையும் சமாளிக்க முடியாமல் தம்பதிகள் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: இராஜபாளையம்: சீருடையில் இருந்த காவலர்கள் மீது லத்தியால் சரமாரி தாக்குதல்.. போதையில் கும்பல் வெறிச்செயல்..!