ஹிந்தி படிக்கணுமா வேண்டாமா? - விஜய பிரபாகரன் நறுக் பதில்.!



Vijaya Prabhakaran Says Learn More Languages 

 

எந்த மொழியும் குறைவானது இல்லை, அவரவருக்கு அவரவர் மொழி பெரியது,  நாம் அனைத்து மொழியையும் கற்றறிய வேண்டும் என விஜய பிரபாகரன் கூறினார். அதே நேரத்தில் அதனை வற்புறுத்தி படிக்கவைக்க முயல்வது தவறானது எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற தேமுதிக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய பிரபாகரன், "ஆளுநர் ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட திருநாடு என்ற வார்த்தை விடப்பட்டு பாடப்பட்டது தவறானது எனினும், அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டபின்னரும், திமுக & அதன் கூட்டணி கட்சிகள் தொடர் அரசியல் செய்கின்றன. 

இதையும் படிங்க: கடனை கேட்டு தகாத வார்த்தையால் பேச்சு; தேமுதிக நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை.. வீடியோ வெளியிட்டு சோகம்.!

வெளிமாநிலம் சென்றால் என்ன செய்வது?

ஒரு பக்கம் ஹிந்தி படி என ஒரு கட்சி கூறுகிறது, மற்றொருபக்கம் படிக்காதே என வேறொரு கட்சி கூறுகிறது. தமிழ் மொழியை 100 % கற்றுக்கொண்டு, உள்ளூரில் வேலை கிடைக்காமல் வெளியூர் செல்லும் நபர்கள் என்ன செய்வது?. அவர்கள் ஆந்திரா, பெங்களூர், மும்பை போன்ற இடங்களுக்கு சென்றால், உள்ளூர் மொழியை காற்றுதான் ஆக வேண்டும். 

அனைத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்

ஒரு மொழியை படிக்காதே என சொல்லவும், கட்டாயம் நீ இதைத்தான் படிக்க வேண்டும் எனச் சொல்வதற்கும் யாருக்கும் உரிமை என்பது இல்லை. இந்த உலகில் வானுக்கு இல்லை இல்லை என்பதைப்போல, நமது அறிவுக்கும், கற்றல் தேடலுக்கும் எல்லை இல்லை. பல விஷயங்களையும், மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்" என கூறினார். 
 

 
 

 

 

இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்தியதால் சோகம்; சீல் வைத்த பயங்கரம்.. பெரம்பலூரில் அதிர்ச்சி.!