Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
#Breaking: "உணவு, குடிநீர் வேண்டும்" போராட்டத்தில் குதித்த மக்கள்.. திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் ஸ்தம்பித்துப்போன போக்குவரத்து.!
2 நாட்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில், தங்களுக்கு நிவாரணப்பொருட்கள், உணவு வழங்க வேண்டும் என போராட்டம் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசூர், இருவேல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், பெஞ்சல் புயலின் மழையால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில், 2 நாட்களாக உணவு உட்பட அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் தங்களுக்கு உணவு, குடிநீர் வழங்குமாறு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட மூதாட்டி; கயிறுகட்டி உயிரை காப்பாற்றிய பொதுமக்கள்.!
மக்கள் போராட்டம்
ஏற்கனவே சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டி பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால், வாகனங்கள் திருக்கோவிலூர், திருவண்ணாமலை, திண்டிவனம் மார்க்கத்தில் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று நடுவழியில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் இன்று மாற்றுப்பாதையில் பயணத்தை தொடங்கியது.
உணவு-தண்ணீர் கேட்டு குமுறல்
ஆனால், அரசூர் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தியதால், சாலையில் 2 மணிநேரத்திற்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. குழந்தைகள், முதியவர்கள், பெண்களை வைத்துக்கொண்டு உணவு கூட வழங்கப்படவில்லை என்றால் என்ன செய்வது ? என போராட்டம் நடந்து வருகிறது. காவலர்கள், வருவாய் கோட்டாட்சியர் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதிலும், உணவு, குடிநீர் வந்தால் மட்டுமே போரட்டம் ஓயும் என மக்கள் ஆதங்கத்துடன் போராடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிலேட்டில் எழுதி உதவிகேட்ட மக்கள்; அரகண்டநல்லூரில் பதறவைக்கும் சம்பவம்.!