#JustIN: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!



Viluppuram District Holiday on 4 Dec 2024 

 

பெஞ்சல் புயலின் தாக்கத்தால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கடும் மழையை எதிர்கொண்டு, சாத்தனூர் அணை நிரம்பி வழிந்தது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் 52 ஆண்டுகளுக்கு பின் வரலாறு காணாத வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

வெள்ளநீர் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளில் புகுந்தது. இதனால் விழுப்புரம் மாவட்டமே வெள்ளத்தில் தத்தளித்தது:

இதையும் படிங்க: #Big Breaking: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு?.. பொதுமக்கள் ஆவேசம்.. விழுப்புரத்தில் பரபரப்பு.!

விழுப்புரத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

இந்த நிலையில், புதுச்சேரியில் மழைநீர் தேங்கியுள்ள காரணத்தால், பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அங்குள்ள 17 பள்ளிகளுக்கு விடுப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளம் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல இடங்களில் வெள்ளம் வடிந்தாலும், மக்கள் மீட்பு பணிகளில் தொடர்ந்து வருவதாலும், அவர்களின் இயல்பு நிலை திரும்ப வேண்டியும் நாளையும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: "உணவு, குடிநீர் வேண்டும்" போராட்டத்தில் குதித்த மக்கள்.. திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் ஸ்தம்பித்துப்போன போக்குவரத்து.!