மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிறந்தநாள் விழா கலவரத்தில் காதை கடித்து துப்பிய வாலிபர்; விழுப்புரத்தில் பயங்கரம்.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தவேல், இவரின் மனைவி சரண்யா. தம்பதிகளுக்கும், ஆனந்தவேலின் தம்பி லட்சுமணனுக்கும் இடையே குடுமபத்தகராறு இருந்து வந்துள்ளது.
கடந்த 21ம் தேதி இவர்களின் உறவினர் வீட்டு குழந்தை பிறந்தநாள் விழாவுக்கு குடும்பமாக அனைவரும் சென்றுள்ளனர். அச்சமயம் சரண்யாவின் சகோதரர் சக்கரவர்த்தி எச்சில் துப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: மதுபோதையில் பெண் கிராம நிர்வாக அலுவலர் மீது சரமாரி தாக்குதல்; திமுக கவுன்சிலர் கைது.!
எச்சில் துப்பியதில் நெடுந்தொடர் பாணியில் சண்டை
இதனால் லட்சுமணன் மனைவி திவ்யா தன்னைப்பார்த்து அவர் காரி உமிழ்வதாக வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் அங்கு தகராறு ஏற்பட்ட நிலையில், ஒருகட்டத்தில் இரண்டு குடும்பமும் அடித்துக்கொண்டுள்ளது.
கடித்து துப்பப்பட்ட காது
இந்த சம்பவத்தில் சக்கரவர்த்தியின் தம்பி சங்கர், லட்சுமணனின் காது ஒன்றை கடித்து துப்பி இருக்கிறார். இதனால் பதறிப்போன உறவினர்கள், அவரை மீட்டு மருத்துவமணையில் அனுமதி செய்தனர்.
சண்டை விவகாரம் குறித்து இருதரப்பும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 7 மாத டியூசன் காதல்; கைகளை துப்பட்டாவால் கட்டிக்கொண்டு உயிரைமாய்த்த 14 வயது சிறுமி, 16 வயது சிறுவன்.!!