மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுபோதையில் பெண் கிராம நிர்வாக அலுவலர் மீது சரமாரி தாக்குதல்; திமுக கவுன்சிலர் கைது.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கானை, முகையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவர் திமுக கவுன்சிலராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று ஆயந்தூர், ஆ. கூடலூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் பெண் சாந்தி என்பவர், உணவகத்தில் தனது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்காக உணவை வாங்கச்சென்றுள்ளார்.
அங்கு மதுபோதையில் வந்த திமுக கவுன்சிலர் ராஜீவ், நீ எதற்காக நான் ஆர்டர் செய்த உணவை வாங்கினாய்? என்று கேட்டு தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் ராஜீவ் காந்தியின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.