மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது சோகம்; முதியவர் கார் மோதி பரிதாப பலி.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, கஞ்சநாயக்கன்பட்டி கிராமம், தெற்குத்தெருவில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (82). இவர் நேற்று சொந்த வேலை காரணமாக வெளியே சென்றார். பின்னர் தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.
கார் மோதி விபத்து:
முதியவர் பாலகிருஷ்ணன் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து வந்துகொண்டு இருந்தபோது, அவ்வழியே வந்த கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.
இதையும் படிங்க: சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து விவகாரம்; உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடல்.!
சிகிச்சை பலனின்றி பலி:
இதனையடுத்து, உடனடியாக முதியவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருப்பூரை சேர்ந்த கார் ஓட்டுநர் கைது:
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கபாலீஸ்வரன் என்பவரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், சித்தம்பலம் பகுதியை சேர்ந்தவர் ஆவார். சம்பவத்தன்று தூத்துக்குடியில் இருந்து மதுரை வந்தபோது முதியவரின் மீது மோதி விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.