சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து விவகாரம்; உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடல்.! 



Virudhunagar sivakasi Firework Factory Explodes 

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, திருத்தங்கல், செங்கமலபட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலை நேற்று வெடித்து சிதறியது. 80 க்கும் அதிகமான பணியாளர்கள் வேலை பார்த்து வந்த பட்டாசு ஆலையில் இருக்கும் 21 அறைகளில், 7 அறைகள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அங்கு வேலை பார்த்துக்கொண்டு இருந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

10 பேர் பலி, 11 பேர் படுகாயம்:

மேலும், 11 பேர் படுகாயத்துடன் அலறித்துடித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சிவகாசி காவல் துறையினர் மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்தில் பலியான 10 பேரின் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: கட்டிட பணிகளில் சோகம்; கான்கிரீட் தலையில் விழுந்து 61 வயது முதியவர் பலி.!

நிறைவுபெற்ற உடற்கூறாய்வு: 

விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் தங்களின் இரங்கலை பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கான இழப்பீடு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று வழங்கப்படும் எனவும் கூறினார். இதனிடையே, மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவுபெற்றதை தொடர்ந்து, அவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பட்டாசு ஆலை உரிமையாளர், மேலாளர், ஒப்பந்ததாரர் உட்பட 4 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் விபரம்:

ரமேஷ் (31), வீரலட்சுமி (48), காளீஸ்வரன் (47), முத்து (52), ஆவுடையம்மாள் (75), வசந்தி (38), பேச்சியம்மாள் (எ) ஜெயலட்சுமி (22), லட்சுமி (43), விஜயகுமார் (30), அழகர்சாமி ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். 

இதையும் படிங்க: தொட்டில் கழுத்தில் இறுக்கியதால் சோகம்; உடன்பிறப்புகளுடன் விளையாடிய சிறுவன் மரணம்.. சிவகாசியில் சோகம்.!