பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
கட்டிட பணிகளில் சோகம்; கான்கிரீட் தலையில் விழுந்து 61 வயது முதியவர் பலி.!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், முகவூர் பகுதியை சேர்ந்தவர் சுமதி (37). இவரின் தந்தை சங்கரலிங்கம் (61). கட்டிட தொழிலாளி ஆவார்.
சம்பவத்தன்று முகவூர் காமாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள ராமச்சந்திரன் என்பவரின் வீட்டு மாடியில், கான்கிரீட் உடைப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்.
உடைக்கப்பட்ட கான்கிரீட் தலையில் விழுந்து சோகம்:
அச்சமயம் கான்கிரீட் ஒன்று சங்கரலிங்கத்தின் தலையில் விழுந்துள்ளது. அவரை அங்கிருந்த தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.