மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல் கணவருக்கு பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்த தாய் உட்பட 9 பேர் கைது.! விருதுநகரில் அதிர்ச்சி.!
தான் பெற்றெடுத்த குழந்தையை விற்பனை செய்த தாய் உட்பட 9 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செவல்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கலைச்செல்வி (வயது 25). இவரின் கணவர் இறந்ததும், இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில், கலைச்செல்வியின் ஒருவயது பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டதாக கூரைக்குண்டு கிராம நிர்வாக அலுவலர் சுப்புலட்சுமி, சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை செய்த காவல் துறையினர், முதலில் கலைச்செல்வி மற்றும் அவரின் தந்தை கருப்பசாமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், இடைத்தரகர்கள் உதவியுடன் குழந்தை மதுரையை சேர்ந்த தம்பதிக்கு ரூ.2.50 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, மதுரை விரைந்த காவல் துறையினர், ஆரப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் வைத்து குழந்தையை மீட்டனர்.
மேலும், குழந்தையை விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், ரூ.2 இலட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இந்த சபவத்தில் தொடர்புடையவர்களாக குழந்தையை வாங்கிய கருப்பசாமி - பிரியா தம்பதி, இடைத்தரகர் கார்த்திக், மகேஸ்வரி, மாரியம்மாள், கார் ஓட்டுநர் செண்பகராஜன், நந்தகுமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.