மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொலையில் முடிந்த குழாயடி சண்டை.!! இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட மூதாட்டி மரணம்.!!
தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக மூதாட்டி இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தென்காசி மாவட்டத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் வெள்ளத்துரைச்சி என்ற பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தண்ணீர் பிடிப்பதில் தகராறு
கிராமங்களில் தொடங்கி நகரங்கள் வரை தண்ணீர் பிடிப்பதில் ஏற்படும் தகராறு தொடர் கதையாகி வருகிறது. கார்ப்பரேஷன் மற்றும் பஞ்சாயத்து போர்டு வழங்கும் தண்ணீரை பிடிப்பதில் பெண்களுக்கு இடையே நடைபெறும் மோதல் என்பது அன்றாடம் நடைபெறும் ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் இது போன்ற ஒரு சம்பவம் கொலையில் முடிவடைந்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட மூதாட்டி
தென்காசி மாவட்டம் சொக்கலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த தவசி கன்னு என்ற பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளத்துரைச்சி என்பவருக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த வெள்ளத்துரைச்சி அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தவசி கண்ணுவை பலமாக தாக்கி இருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த தவசி கண்ணுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையும் படிங்க: "சாராயக்கடையை மூடுங்க".. 10 வயதுசுல இருந்து என் பிள்ளை குடிக்கிறான் - தாய் கண்ணீர் குமுறல்.!
காவல்துறை விசாரணை
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இறந்த மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மூதாட்டியை தாக்கிய வெள்ளத்துரைச்சியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: போதையில் தகராறு.. மனைவியை தவறாக பேசிய கறிக்கடைக்காரர்.!! போட்டுத் தள்ளிய நண்பன்.!!