இத்தனை வயதாகியும் திருமணமாகவில்லை.. இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு!



Young man suicide for did not marry

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள வந்தவிளை பகுதியை சேர்ந்தவர்கள் ரத்தினசாமி-ஜானகி தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், 33 வயதான சதாசிவம் என்ற மகனும் இருந்துள்ளார். இதில் மகள்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

marriage

இதனிடையே ரத்னசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவால் காலமானார். அதன் பின்னர் சதாசிவம் அவரது தாயார் ஜானகியுடன் வசித்தே வந்துள்ளார். இதில், சதாசிவம் திருமணமாகாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சதாசிவம் நேற்று இரவு வீட்டின் அருகே உள்ள தென்னந்தோப்பில் உள்ள மரத்தின் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அடுத்த நாள் காலை அந்த வழியாக சென்ற ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

marriage

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த சதாசிவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.