மகிழ்ச்சியான செய்தி! வாட்ஸப்பில் வருகிறது சூப்பரான புது வசதி! இப்போவே பாருங்க!



whatsapp-new-feature-tells-how-many-time-message-forwar

சமூக வலைத்தளங்கள் மூலம் நல்ல விஷயங்கள் நடைபெற்றாலும் அதே சமயம் பல்வேறு போலியான செய்திகளும், வதந்திகளும் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது. போலியான செய்திகள் அதிகம் பகிரப்படும் முக்கியமான இரண்டு செயலிகள் என்றால் ஓன்று Facebook மற்றொன்று WhatsApp . இவை இரண்டுமே ஒரே நிறுவனத்திற்கு சொந்தமானதும் கூட.

போலி செய்திகள் பரப்படுவதை தடுக்க Facebook நிறுவனம் பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறது. குறிப்பாக வாட்ஸப்பில் பரவும் போலி செய்திகளை தடுக்கவும், போலி செய்திகளை கட்டுக்குள் கொண்டுவரவும் புது புது வசதிகளை அறிமுகம் செய்துவருகிறது வாட்சப் நிறுவனம்.

Whatsapp updates

அந்த வகையில் கடந்த வருடம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பார்வேர்ட் செய்யும் செய்திகளுக்கு Forward என்ற லேபிளை செட் செய்தது வாட்சப் நிறுவனம். இதன் மூலம் இந்த செய்தி பார்வேர்ட் செய்யப்பட்டது என்பதை வாட்சப் வாடிக்கையாளர்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம்.

இந்நிலையில் இதன் அடுத்த கட்டமாக மேலும் இரண்டு புது வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது வாட்சப் நிறுவனம்.

1 . எத்தனை முறை பார்வேர்ட் செய்யப்பட்டது:
அதாவது நீங்கள் மற்றொருவருக்கு அனுப்பும் செய்தியை மற்றவர்கள் அவர்களது நண்பர்களுக்கு பகிரும் பட்சத்தில் இதுபோன்று எத்தனை முறை நீங்கள் உருவாக்கிய செய்தி மற்றவர்களுக்கு பார்வேர்ட் செய்யப்பட்டுள்ளது என்ற எண்ணிக்கையை காட்ட உள்ளது வாட்சப் நிறுவனம்.

Whatsapp updates

2 . அதிகமுறை பார்வேர்ட்:
தற்போது பார்வேர்ட் செய்யப்படும் செய்திகளுக்கு மேல் Forward என்ற லேபிள் காட்டப்படும். ஒருவேளை ஒரு செய்தியானது அதிகமான நபர்களால் அதிகமுறை பார்வேர்ட் செய்யப்பட்டால் Frequently Forward என்ற லேபிளை காட்ட உள்ளது வாட்சப் நிறுவனம்.