தாலிக்கயிறு ஏறிய சற்று நேரத்தில், தூக்கு கயிறு.. இளம்பெண்ணின் விபரீத முடிவு.!



theni women suicide for forced marriage

கட்டாய திருமணத்தால் 24 வயது இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கோலாகல திருமணம்

தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி பகுதியில் சேர்ந்த சௌமியா என்ற 24 வயது பெண்ணிற்கு, புதுப்பட்டி பகுதியை சேர்ந்த பாலாஜி என்ற 27 வயது இளைஞருடன் கடந்த ஜனவரி 31ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. தனியார் மண்டபம் ஒன்றில் கோலாகலமாக இந்த திருமணம் நடந்து முடிந்தது.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியால் சோகம்: பணத்தை இழந்த 25 வயது இளைஞர் தற்கொலை.!

Theni

தாலி கயிறுடன் தூக்கு கயிறு

இதன் பின்னர், திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதிகள் பெண் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் இருந்த அறை ஒன்றில் சென்று பூட்டி கொண்ட சௌமியா அங்கே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கன்னியாஸ்திரி ஆசை

போலீசார் நடத்திய விசாரணையில் சௌமியாவிற்கு இந்த திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லை என்பதும் அவரை கட்டாயப்படுத்தி இந்த திருமணத்தில் பெற்றோர் ஈடுபடுத்தி இருக்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே, பெற்றோர் மீது கொலைக்கு தூண்டிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சௌமியா கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்று குடும்பத்தாரிடம் சண்டையிட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: குளிருக்கு மூட்டிய தீ துணியில் பற்றி மூதாட்டி பலி; நொடியில் நடந்த சோகம்.!!