நாங்கள் அமைதியை விம்புகிறோம் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.. அமைதி பேச்சுவார்த்தைக்கு பச்சைக்கொடி.!



Ukraine President Gives Green Signal to US for Peace Talk 

 

நேட்டோ படையுடன் இணையும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷியா கடந்த 2 ஆண்டுகளாக உக்ரைன் நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனை தன்னிடம் சரணடையச்சொல்லி தாக்குதல் நடத்தப்படுகிறது.

போரின் தொடக்கத்தில் இருந்து கடந்த சில மாதங்கள் வரை அமெரிக்காவின் நிதிஉதவி, இராணுவ தளவாடங்களை பெற்றுக்கொண்ட உக்ரைன், தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவால் தவிக்கும் நிலைக்கு உள்ளாகி இருக்கிறது. உக்ரைன் அதிபர் அமெரிக்க பயணமும் தோல்வி அடைந்தது. 

இதையும் படிங்க: குச்சி ஐஸ் பிரியர்களுக்கு ஷாக் செய்தி.. ஐஸ்கிரீமில் உறைந்துபோன குட்டி பாம்பு..! நல்ல வேலை சாப்பிடல..

இந்நிலையில், சவூதி அரேபியாவிலில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைக்கு பின்னர், உக்ரைன் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்யா விரைவில் அது தொடர்பான பச்சைக்கொடி காண்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் 30 நாட்கள் இடைக்கால போர் நிறுத்தத்தினை ஏற்க முன்வந்துள்ளது. இந்த தகவலை அமெரிக்கா அதிபர் உறுதி செய்துள்ளார். 

மேலும், அமெரிக்காவின் வாதங்களை புரிந்துகொண்டு, இடைக்கால போர் நிறுத்தத்துக்கான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆக்கபூர்வமான விசயத்திற்கு வழிவகை செய்த அதிபர் டிரம்புக்கு நன்றி என உக்ரைன் அதிபர் சார்பிலும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. உக்ரைனின் முடிவு காரணமாக, அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய உதவியை நிறுத்தியது தொடர்பான விவகாரத்தில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் அமைதியை மட்டுமே விரும்புவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க: 299 சிறுமிகள், பெண்களிடம் அத்துமீறல்.. மருத்துவரின் அதிர்ச்சி செயல் அம்பலம்.. பதறவைக்கும் தகவல்.!