குச்சி ஐஸ் பிரியர்களுக்கு ஷாக் செய்தி.. ஐஸ்கிரீமில் உறைந்துபோன குட்டி பாம்பு..! நல்ல வேலை சாப்பிடல..



in Thailand a Snake Found In Ice Cream 


ஆசிய நாடுகளில் கோடைகாலம் தொடங்கி இருக்கும் நிலையில், மக்கள் வெப்பத்தின் தாக்கத்தை அனுபவிக்க தொடங்கி இருக்கின்றனர். கோடைகாலம் என்றாலே, பொதுவாக ஐஸ்கிரீம் விற்பனை என்பது அதிகரிக்கும்.

குச்சி ஐஸ் வாங்கியவருக்கு ஷாக்

இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் உள்ள முயங்க், பாக் தொ பகுதியில் வசித்து வரும் ராய்பான் நெகிழங்ப்பூண் என்பவர் சாப்பிட குச்சி ஐஸ் வாங்கி இருக்கிறார். அதனை ஆவலுடன் பிரித்து பார்த்தபோது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இதையும் படிங்க: 299 சிறுமிகள், பெண்களிடம் அத்துமீறல்.. மருத்துவரின் அதிர்ச்சி செயல் அம்பலம்.. பதறவைக்கும் தகவல்.!

அதிகாரிகள் விசாரணை

அதாவது, பாம்பு ஒன்று அவரின் குச்சி ஐஸில் உறைந்த நிலையில் இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த, நபர் தனது முகநூல் பக்கத்தில் அதிர்ச்சியை பகிர்ந்து இருக்கிறார். இந்த விஷயம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூரில், தள்ளுவண்டியில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் பாம்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. கோடைகாலம் என்பதால், நம்ம ஊர் பெற்றோர்களும் உஷாராக இருங்கள்.
 

இதையும் படிங்க: உள்நாட்டுப்போரால் பயங்கரம்.. சிரியாவில் 1000 பேர் பலி.. அதிரவைக்கும் தகவல்.!