மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெற்றோர்களே உஷார் : குழந்தைக்கு எமனாக மாறிய கேரட்.. துடிதுடித்து இறங்க சோகம்.!
கேரட்டை விழுங்கிய குழந்தை :
இலங்கையில் உள்ள வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அனுராதபுரத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த ஒன்றரை வயது குழந்தை ஒன்று, கடந்த 11ஆம் தேதி மாலை நேரத்தில், கேரட் துண்டை விழுங்கி இருக்கிறது. அப்போது அந்த துண்டு குழந்தையின் தொண்டையில் சிக்கி, குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
மேல்சிகிச்சைக்கு விரைவு :
உடனடியாக அவசர ஆம்புலன்ஸ் வைத்து அந்த குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். அப்போது குழந்தைக்கு மருத்துவம் பார்க்க போதிய வசதி இல்லை என்று கூறி அடுத்ததாக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாய் துர்நாற்றத்தை போக்கனுமா.. இதை சாப்பிடுங்க போதும்.!
துயரத்தில் பெற்றோர் :
அங்கிருந்து குழந்தை புறப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது. இது பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கேரட் துண்டை விழுங்கியதால் ஒன்றரை வயது பிஞ்சு குழந்தை உயிர் இழந்த சம்பவம் பெற்றோரையும், உறவினர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: எப்போதும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமா? இந்த ஜூஸ் போதும்.!