மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
99 வயது மூதாட்டி கதறக்கதற பலாத்காரம்.. Spy-Cam லைவில் பதறிப்போன குடும்பம்.. முதியோர் இல்லத்தில் பகீர் சம்பவம்..!!
99 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 48 வயது நபருக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள லான்கேசரின், பிளாக்பூல் நகரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட மற்றும் அவர்களால் விருப்பப்பட்டு சேர்க்கப்பட்ட பல ஆண்-பெண் முதியவர்கள் தங்கியிருந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த முதியோர் இல்லத்தில் 99 வயது மூதாட்டி ஒருவர் குடும்பத்தினரால் சேர்க்கப்பட்டு அங்கேயே வசித்து வருகிறார்.
அவரின் குடும்பத்தினர் மூதாட்டியை வந்து பார்த்துச் செல்லும் போது, என்னை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். இங்கு உள்ளவர்கள் என்னை தாக்குகிறார்கள், கொடுமைப்படுத்துகிறார்கள் என்று மூதாட்டி கூறியிருக்கிறார். இதனை முதலில் நம்பாத குடும்பத்தினர், பின்னாட்களில் மூதாட்டி கூறுவதில் உண்மை இருக்கலாம் என்று நினைத்து, அவர் தங்கியிருந்த அறையில் ஸ்பை கேமராவை பொருத்தி உள்ளனர்.
அப்போது, 99 வயது மூதாட்டியை முதியோர் இல்லத்தில் பராமரிப்பாளராக பணியாற்றி வரும் பிலிப் கார்லே என்ற 48 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்த காட்சிகள் இடம்பெற்று உள்ளது. ஸ்பை கேமரா வழியே நேரலையில் இதனை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் ஆதாரத்துடன் வழக்கு பதிவு செய்து பராமரிப்பாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பராமரிப்பாளருக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.