உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர்; வலியோடு மனம்நெகிழ்ந்து நன்றி கூறிய ரைடர்.. நெகிழவைக்கும் வீடியோ.!



Even his pain he apologise and thanked to the driver who Saves Life 

 

சாலைவழிப் பயணங்களில் இன்றளவில் விபத்துகள் என்பது மிகமிக சாதாரணமாகிவிட்டது. தனிநபரின் அலட்சியம், வாகனத்தின் திடீர் செயலிழப்பு உட்பட பல்வேறு காரணங்களால் விபத்துகள் நடக்கின்றன. இதில், அதிவேகம் என்பது அதிகம் கவனிக்கப்படுகிறது. 

சாலைப் பயணங்களில் கவனம்

என்னதான் நாம் சாலைகளில் கவனமாக பயணம் செய்தால், விபத்துகள் என்பது எப்போதும் எங்கேயும் ஏற்படும் வாய்ப்புகளை கொண்டது என்பதால், நாம் கவனமுடன் செயல்படுவது அத்தியாவசியமாகிறது. ஒருசிலர் மட்டுமே விபத்துகளில் சிக்கினாலும் ஒரு சிறிய காயம் கூட இன்றி தப்பிப்பார்கள்.

இதையும் படிங்க: "பீர் முக்கியம் பாஸ்" விபத்தில் தப்பிய அடித்த நொடியே பாருக்குள் நுழைந்த நபர்.!

உயிரை காத்த ஓட்டுனருக்கு வலியிலும் நன்றி

இந்நிலையில், இருசக்கர வாகன ஓட்டி, மலைப்பாதையில் மழை பெய்யும் போது சென்றுகொண்டு இருந்த நிலையில், திடீரென சறுக்கி கீழே விழுந்தார். அவருக்கு குறிப்பிட்ட இடைவெளியில் கனரக வாகனம் ஒன்றும் மிதமான வேகத்தில் வந்த நிலையில், வாகன ஓட்டி கீழே விழுந்ததை கண்ட கனரக வாகனத்தின் ஓட்டுநர், உடனடியாக செயல்பட்டு வாகனத்தின் வேகத்தை குறைத்து அதனை நிறுத்தினார். 

கீழே விழுந்து எழுந்த இருசக்கர வாகன ஓட்டி, தனது உடலில் சில காயங்களால் வலிகள் ஏற்பட்டு இருப்பதை உணர்ந்தாலும், அவர் எழுந்ததும் நன்றி கூறி நெகிழ வைத்தார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

 

இதையும் படிங்க: கால்களை உடைத்துக்கொண்ட பாகிஸ்தான் அதிபர்; என்ன நடந்தது? மருத்துவமனையில் அனுமதி.!