பாம்பு கடித்த நபரை காப்பாற்றாமல் தீவிர பிரார்த்தனை; பரிதாபமாக உயிரிழந்த பெண்.! 



in Africa Kenya Women Dies after Snake Bite lag of Treatment 


ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா நாட்டில் உள்ள மதாயோஸ் பகுதியில் வசித்து வரும் பெண்மணி மார்கரெட் அகுது (Margaret Agutu). இவர் கடந்த நவம்பர் 30ஆம் தேதி, தனது நெருங்கிய நண்பரான பக்கத்து வீட்டாரின் அழைப்பின் பேரில், அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். 

பாம்பு கடித்தது

அங்கு நடந்த சடங்கு தொடர்பான பிரார்த்தனையில் அவர் கலந்து கொண்டுள்ளார். இதனிடையே, பிரார்த்தனையின் போது விஷப்பாம்பு ஒன்று பெண்மணியை கடித்து இருக்கிறது. 

இறுதி அலரில் கிடைத்த பலனில்லாத நியாயம்

இதனால் பதறிப் போன பெண்மணி தன்னை காப்பாற்றுமாறு கூறியும், அங்கு சடங்கை நடத்தியவர் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்க முன்வரவில்லை. பெண் தனது உயிர்போகும் தருவாயில் அலறிக்கொண்டு இருக்க, இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: கால்பந்து போட்டியில் சண்டை; இருதரப்பு மோதலில் 100 பேர் மரணம்.. ஆப்பிரிக்காவில் பயங்கரம்.!

நீதி கேட்டு கோரிக்கை

மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இந்த விஷயத்தால் அகுதுவின் கணவர் அலோய்ஸ் ஓமா ஒகுமு மற்றும் அவர்களது மகள் ஸ்டெல்லா அதியெனோ பெரும் சோகத்தில் இருக்கின்றனர். மேலும், அகுதுவின் மறைவிக்கு நீதி வேண்டும் எனவும் போர்க்குரல் முன்வைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: உபயோகப்படுத்திய காண்டம், செத்துப்போன கரப்பான் பூச்சி.. கேடி ஆசாமியை தட்டிதூக்கிய போலீஸ்..!