கால்பந்து போட்டியில் சண்டை; இருதரப்பு மோதலில் 100 பேர் மரணம்.. ஆப்பிரிக்காவில் பயங்கரம்.!



Guinea Foot Ball Match Death 

 

நடுவரின் சர்ச்சை செயல்பாடு காரணமாக உண்டான வாக்குவாதம் 100 பேரின் மரணத்தில் முடிந்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினியாவில் கால்பந்து போட்டியானது நடைபெற்றது. இந்தியாவில் கிரிக்கெட் போல, ஆப்பிரிக்க நாடுகளில் கால்பந்து மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். 

இதையும் படிங்க: உபயோகப்படுத்திய காண்டம், செத்துப்போன கரப்பான் பூச்சி.. கேடி ஆசாமியை தட்டிதூக்கிய போலீஸ்..!

இதனிடையே, கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட சிறிய மோதலானது, இரண்டு குழுக்களுக்கு இடையேயான பெரிய மோதலாக உருவானது. 

இருதரப்பு மோதலில் தொடர்பான பதறவைக்கும் காட்சிகள்

கூட்டநெரிசல், மோதலில் சிக்கி 100 பேர் பலி

இந்த மோதலில் இருதரப்பும் பயங்கரமாக சண்டையிட்ட நிலையில், மொத்தமாக இந்த சம்பவத்தில் 100 பேர் வரை உயிரிழந்தனர். தாக்குதல் சம்பவம், கூட்டநெரிசல் என உயிரிழந்தோரின் சடலங்கள் வீதிகளில் சிதறி கிடந்தது. 

தகவல் அறிந்த அந்த மீட்பு படையினர், கலவரக்காரர்களை விரட்டி அடித்து பலியானவர்கள் உடலை மீட்டனர். போட்டியின் நடுவே நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவே இந்த மோதலுக்கு காரணம் என தெரியவரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: இந்திய அரசுத்துறை அதிகாரிகளின் செல்போன் உரையாடல் ஒட்டுக்கேட்பு; கனடா மீது இந்தியா குற்றச்சாட்டு.!