கட்டுக்கடங்காத காட்டுத்தீ.. எரிந்து சாம்பலான நகரம்.. கண்கலங்க வைக்கும் காட்சிகள்.!



  in US Los Angeles Forest Fire 

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா உட்பட பல மாகாணங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே, கடுமையான வெப்பம் காரணமாக காட்டுத்தீ பிரச்சனையை சந்தித்து வந்தது. இதனால் அதிகளவு உயிர் மற்றும் பொருட்சேதமும் ஏற்பட்டன.

இந்நிலையில், அங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணம் அல்டடேனா, பஸடேனா ஆகிய பகுதிகளில் சுமார் 10,600 ஏக்கர் நிலங்கள் காட்டுத்தீ காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. 

காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை தீவிரம்

தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், ஹெலிகாப்டர், விமானங்கள் கொண்டும் நீரை ஆகாயத்தில் இருந்து பீய்ச்சி தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா; பகிரங்க எச்சரிக்கை.!

இந்த விஷயத்தில் தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4 தீயணைப்பு படை வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். மேலும், இழப்பீடு குறித்த விபரங்கள் அம்மாகாண அரசு சார்பில் சேகரிக்கப்படுகிறது.

நகரமே காட்டுத்தீயில் சிக்கிய காணொளி

இதையும் படிங்க: பதவி விலகினார் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ; பரபரப்பு உலக அரசியல்.!