ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா; பகிரங்க எச்சரிக்கை.!



Kim Jong Un Lead North Korea tests Hypersonic Missile 


உலகிலேயே சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வரும் வடகொரியாவின், அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டின் ஒட்டுமொத்த வளத்தையும் அணுஆயுத கண்டுபிடிப்பில் முதலீடு செய்திருக்கிறார். அமெரிக்கா வடகொரியாவின் நிலையை மாற்ற முற்பட்டும் பலனில்லை. 

அமெரிக்கா அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் வடகொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. 

ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை

இந்நிலையில், வடகொரியா அரசு ஒலியை விட வேகமாக பயணிக்கும் ஹைப்பர் சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன் வாயிலாக வடகொரியா பிராந்தியத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் நாடுகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பதவி விலகினார் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ; பரபரப்பு உலக அரசியல்.!

இவ்வாறான ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை வைத்து பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதனை வடகொரியா உபயோகம் செய்யும் எனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ரஷியா உதவி?

முன்னதாக வடகொரியா - ரஷியா இடையேயான ராஜாங்க ரீதியிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் புத்தாக்கம் பெற்ற நிலையில், ரஷியா அணு ஆயுதங்கள் தொடர்பான தொழில்நுட்பத்தை வடகொரியாவுக்கு வழங்கி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; காலையிலேயே துயரம்.. நடுநடுங்கிப்போன மக்கள்.!