4 கைகள், 3 கால்களுடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்; உயிர்கொடுத்த மருத்துவர்கள்.!



Indonesia Twin Born by Conjoined 4 Arms 3 Leges Ischiopagus Tripus Phenomenon 

 

கடந்த 2018ம் ஆண்டு இந்தோனேஷியாவை சார்ந்த தம்பதிக்கு, குழந்தைகள் இரட்டையராக நான்கு கைகள், மூன்று கால்கள் மற்றும் பகிரப்பட்ட பிறப்புறுப்புடன் பிறந்தனர். இந்த நிலை மருத்துவத்துறையில் இஸ்கியோபாகஸ் டிரிபாஸ் என்று அழைக்கப்படுகிறது. 2 மில்லியன் நிகழ்வுகளில் அறிய ஒன்று கவனிக்கப்படும் இந்நிகழ்வில் பிறந்த இரட்டை குழந்தைகள் தற்போது வரை படுத்தபடியே வாழ்ந்து வருகின்றனர்.

வயது கூட தொடங்கியதும் சிரமம்

இவ்வாறான சூழ்நிலையுடன் பிறகும் குழந்தைகள் பெரும்பாலும் இறந்து பிறகும், பிறந்து இருக்கும் தன்மை கொண்டவை ஆகும். ஆனால், நல்வாய்ப்பாக இந்தோனேஷியா தம்பதிகளின் குழந்தை உயிர் பிழைத்துக்கொண்டாலும், தற்போது வரை அவர்களால் எழுந்து நிற்க இயலாது. இதனால் சிறார்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். 

இதையும் படிங்க: பெற்றோர்களே உஷார் : குழந்தைக்கு எமனாக மாறிய கேரட்.. துடிதுடித்து இறங்க சோகம்.!

மருத்துவர்கள் முதற்கட்ட சாதனை

இந்நிலையில், மருத்துவர்கள் சிறுவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதன் விளைவாக, இருவரும் தற்போது சுயமாக அமரும் நிலையை அடைந்துள்ளனர். மருத்துவ நிலையில் மிகவும் உயரிய நிலையாக கருதப்படும் இக்குழந்தைகள் விவகாரத்தில், மருத்துவர்கள் திறம்பட செயல்பட்டு அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறான குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதும் மிகவும் சிக்கலான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கலவரம்; விடுதலை கேட்டு மக்கள் போர்க்கொடி.. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.!