மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மத்திய கிழக்கில் அடுத்த போர்? தாக்குப்பிடிக்குமா இஸ்ரேல்?.. ஈரான் தலைமை மதகுரு பகீர் அறிவிப்பு.!
கடந்த 2023, அக்.07 ம் தேதி முதல் இஸ்ரேல் - பாலஸ்தீனியத்தின் ஹமாஸ் குழுவினர் இடையே ஆயுதமேந்திய போர் நடைபெற்று வருகிறது. இந்த போரின் தொடக்கத்தில் இஸ்ரேல் தரப்பில் 1400 பேர் பலியாகினர். ஆனால், பதில் தாக்குதலில் இஸ்ரேலின் தீவிரம் காரணமாக, அப்பாவி பொதுமக்கள் 39000 பேர் பலியாகி இருக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் மத்திய கிழக்கு பகுதியில் தொடர் பதற்றம் நீடித்து வருகிறது. ஹமாஸ் படையினரை மொத்தமாக வேட்டையாடுவோம் என இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது. ஹமாஸுக்கு ஆதரவாக மத்திய கிழக்கில் உள்ள ஈரான் உட்பட பல நாடுகள் நேரடி மற்றும் மறைமுக உதவிகளை செய்து வருகின்றன.
பழிக்கு பழி என எச்சரிக்கை
ஹமாஸ் படையின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரான் நாட்டின் டெஹ்ரானில் கொலை செய்யப்பட்டார். இந்த தகவலை உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்ட இஸ்ரேல், ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என கூறி வருகிறது. ஹனியே-வுக்கு ஆதரவாக உள்ள மத்திய கிழக்கு நாடுகள், இதனால் போரை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல ஆயத்தமாகி வருகின்றன.
இதையும் படிங்க: ஏர் பிரையர் ஆர்டர் செய்த பெண்ணுக்கு பல்லியை அனுப்பிய அமேசான்; பதறவைக்கும் சம்பவம்.!!
இந்நிலையில், ஹனியேவின் கொலைக்கு பழிக்குப்பழியாக இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமெனி உத்தரவிட்டு இருக்கிறார். தங்களின் விருந்தாளியாக ஹனியேவை, ஈரானுக்கு வந்தபோது இஸ்ரேல் கொன்றது தவறானது. இஸ்ரேலை பழிவாங்குவது எங்களின் கடமை என கூறி இருக்கிறார். இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகமாகியுள்ளது.
இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்... பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை.!! விசாரணையில் வெளியான பகீர் தகவல் .!!