மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: Final Destination திரைப்பட பாணியில்... திருமண நிகழ்வில் பயங்கர தீ விபத்து.. 110 பேர் பலி., 150 பேர் உயிர் ஊசல்.!
பைனல் டெஸ்டினேஷன் திரைப்பட பாணியில் திருமண விழா மிகப்பெரிய தீ விபத்தை சந்தித்து பலரும் உடல் கருகி பலியான சோகம் ஈராக்கில் நடந்துள்ளது.
ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் இருந்து 300 கி.மீ தொலைவில் அமைந்துள்ள நிவேஹ் மாகாணம், மோசூல் ஹம்டனியா பகுதியில் இன்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, உறவினர்கள்-நண்பர்கள் என கிட்டத்தட்ட 300 க்கும் அதிகமானோர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில், எதிர்பாராத விதமாக அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி இரவு 10:45 மணியளவில் ஏற்பட்ட இவ்விபத்தில், தீயின் பிடியில் சிக்கி 110 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் படுகாயத்தோடு 150 பேர் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 6 நொடிகள் மட்டுமே கேமிராவில் பதிவான விபத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.
BREAKING: Fire breaks out at wedding hall in northern Iraq, killing at least 100 people - INA pic.twitter.com/PvfJ1psHRN
— BNO News (@BNONews) September 26, 2023