திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
Israel Iran War: உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சி.. போரை தொடங்கியது ஈரான்... இஸ்ரேலில் பாய்ந்த 100+ ஏவுகணைகள்.!
இஸ்ரேல் - பாலஸ்தீனியத்தின் ஹமாஸ் படைகள் இடையே ஏற்பட்ட போர், தற்போது படிப்படியாக மத்திய கிழக்கு நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. ஹமாஸ் படைகள், அதற்கு ஆதரவு கொண்ட அண்டை நாடுகளின் சட்டவிரோத அமைப்புகள் என லெபனான், ஈரான் நாடுகளிலும் இஸ்ரேல் தனது தாக்குதலை தொடருகிறது. அமெரிக்காவும், மத்திய கிழக்கில் இருக்கும் அமெரிக்கா நட்பு நாடுகளுக்கு எதிரான படைகளை வேட்டையாடி வருகிறது.
லெபனான் நாடுகளில் ஏற்படும் தாக்குதல் சம்பவத்தால், அங்குள்ள மக்கள் அகதிகளாக வெளியேற தொடங்கி இருக்கின்றனர். இஸ்ரேல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் படையின் தலைவர்கள், வெளிநாட்டு மண்களிலும் வீழ்த்தப்பட்டு வருகின்றனர். இது இஸ்ரேலை வேறொரு நாட்டுடன் போர்புரிய முக்கிய காரணமாவும் அவர்கள் தரப்பில் அமைகிறது.
இதையும் படிங்க: 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை; அரசின் அதிரடி முடிவு.!!
இஸ்ரேல் - ஈரான் போர் தொடக்கம்
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் மீது உடனடி தாக்குதல் நடத்துவதற்கு ஈரான் தயாராகி வருவதாகவும், அதனால் இஸ்ரேல் கவனமுடன் இருக்குமாறும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில், மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் போர் வருத்தத்தை தருவதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் எச்சரிக்கையை முற்றிலுமாக மறுத்துள்ள இஸ்ரேல், தனது நாட்டின் வான்வழி அமைப்புகள் பாதுகாப்புடன் உள்ளது எனவும் கூறியது. இந்நிலையில், இஸ்ரேலின் மீது ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் வீசப்பட்டு வான்வழி தாக்குதல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெருசலம் நகரின் சில கிலோமீட்டர் தொலைவில் ஏவுகணைகள் விழும் காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
சுமார் 100 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டில் உள்ள வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஆபத்துகள் சைரன் ஒலிகள் கிடைக்கப்பெற்றுள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரக அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் தரப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதேவேளையில், ஈரான் போரை தொடங்கினால், மறக்க முடிய பதிலடி திருப்பி கொடுக்கப்படும் என சிலமணிநேரம் முன் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்த நிலையில், ஈரான் போரை தொடங்கி இருக்கிறது.
Iran's missile launch is a clear declaration of war.#Iran #Israel pic.twitter.com/3nCs5mxxiD
— Shiyar Shikhow (@shiyar_sh) October 1, 2024
இதையும் படிங்க: 104 கிமீ வேகத்தில் அசுரத்தனமான காற்று; வியட்நாமை புரட்டியெடுத்த யாகி புயல்..!