104 கிமீ வேகத்தில் அசுரத்தனமான காற்று; வியட்நாமை புரட்டியெடுத்த யாகி புயல்..! 



 Vietnam Yagi Typhoon Damage  

வியட்நாம் நாட்டினை 250 கி.மீ வேகத்தில் நெருங்கிய யாகி புயல், கரையை கடக்கும்போது 104 கி.மீ வேகத்தில் கடந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. இந்த புயலின் காரணமாக வியட்னாம் நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்கள் பெரிய சேதத்தை கண்டு இருக்கிறது. 

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்குள்ள 4 முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டன. சூப்பர் புயல் என்று முன்னதாகவே கணிக்கப்பட்ட யாகி, 94 கிமீ வேகம் முதல் 104 கி.மீ வேகம் வரையில் கரையை கடந்தது. 

உயர்ந்த கட்டிடத்தில் கண்ணாடிகள் உடைந்த காட்சி

இதையும் படிங்க: அமெரிக்காவா? தமிழ்நாடா?.. அமெரிக்காவாழ் தமிழர்கள் கொடுத்த வரவேற்பில் இன்ப வெள்ளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சுமார் 15 மணிநேரமாக கடந்த புயலின் தாக்கத்தால், அங்குள்ள பல நகரங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. முக்கிய நகரங்களில் உள்ள கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைத்து எறியப்பட்டன. ஒருசில இடங்களில் கார்கள் தூக்கி வீசப்பட்டன.

இந்த புயலின் காரணமாக தற்போது வரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 150 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 116,192 ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த விளைபொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. 

வியட்நாமில், புயலில் சிக்கி 14 பேர் பலி

இருசக்கர வாகன ஓட்டிகளை புயலின் காற்றுகளில் இருந்து பாதுகாத்த கார் ஓட்டுனர்கள்

இருசக்கர வாகன ஓட்டி ஒருவரை காக்க முன்வந்த 2 கார் ஓட்டுனர்கள்

களத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள்

இதையும் படிங்க: டேட்டிங் போகும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் லீவு; அசத்திய தாய் நிறுவனம்.!