#Breaking: நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்; 62 பேர் பரிதாப மரணம்.!



nepal-earthquake-today-07-january-2025-results-35-died

இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடாக இருக்கும் நேபாளத்தில், இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இமயமலை தொடரில் அமைந்துள்ளன நேபாளத்தில், அவ்வப்போது மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உயிர் சேதங்கள் நடப்பது தொடர்கதையாகியுள்ளது. 

ரிக்டர் அளவில் 7.1 புள்ளிகளாக பதிவு

இதனிடையே, இன்று காலை 06:35 மணியளவில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகள் ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் சில எல்லை புற மாநிலங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; காலையிலேயே துயரம்.. நடுநடுங்கிப்போன மக்கள்.!

7 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம்

நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு வந்ததாகவும் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மணிநேரத்திற்கு உள்ளாகவே மிதமான நிலநடுக்கம் முதல் அதிக நிலநடுக்கம் என 7 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பதறிப்போன மக்கள் வீதிகளிலும் தஞ்சம் புகுந்தனர்.

62 பேர் பலி

திபெத் - நேபாளம் எல்லையில் இருக்கும் பகுதியிலும் மையம் கொண்ட நிலநடுக்கம் காரணமாக, மொத்தமாக 62 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்த நிலநடுக்கம் பீகார் உட்பட சில வடக்கு மாநிலத்திலும் உணரப்பட்டுள்ளது. இதனால் நிலநடுக்கத்தின் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள இடங்களுக்கு மீட்பு படையினர் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காத்மாண்டுவில் இருந்து 100 கிமீ தொலைவில் இருக்கும் லாபிசே (Lobuche) பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் நிலவரங்கள் தெரிவிக்கிறது.

சாலையில் தஞ்சமடைந்த மக்கள்

நிலநடுக்கத்தின் அளவை உணர்ந்து ஓடிய மக்கள்

இதையும் படிங்க: #Breaking: நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; காலையிலேயே துயரம்.. நடுநடுங்கிப்போன மக்கள்.!