#Breaking: நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; காலையிலேயே துயரம்.. நடுநடுங்கிப்போன மக்கள்.!



Nepal Earthquake Today 07 January 2025 


இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடாக இருக்கும் நேபாளத்தில், இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இமயமலை தொடரில் அமைந்துள்ளன நேபாளத்தில், அவ்வப்போது மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உயிர் சேதங்கள் நடப்பது தொடர்கதையாகியுள்ளது. 

நிலநடுக்கம்

இதனிடையே, இன்று காலை 06:35 மணியளவில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகள் ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் சில எல்லை புற மாநிலங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதையும் படிங்க: காதலியை இம்ப்ரஸ் செய்ய முயற்சி; சிங்கங்களுக்கு இரையான ஊழியர்.. இறுதிநிமிட வீடியோ.!

மேற்படி விபரங்களை காத்திருக்கிறது

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்குமோ என்ற அச்சமும் நிலவி வருகிறது. நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு வந்ததாகவும் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிறந்தநாள் பார்ட்டியில் வினோத போட்டி; விஸ்கி குடித்தவர் மாரடைப்பால் மரணம்.!