உக்ரைன் - ரஷ்யா போரில், சொந்த நாட்டு மக்களை கடத்தி போரில் ஈடுபடுத்தும் ஜெலன்ஸ்கி? வெளியான அதிர்ச்சி தகவல்.!



ongoing Ukraine Russia War Zelensky Govt Kidnap Peoples to Serve Military 

 

நேட்டோ படையுடன் இணையும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷியா கடந்த 2 ஆண்டுகளாக உக்ரைன் நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனை தன்னிடம் சரணடையச்சொல்லி தாக்குதல் நடத்தப்படுகிறது.

போரின் தொடக்கத்தில் இருந்து கடந்த சில மாதங்கள் வரை அமெரிக்காவின் நிதிஉதவி, இராணுவ தளவாடங்களை பெற்றுக்கொண்ட உக்ரைன், தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவால் தவிக்கும் நிலைக்கு உள்ளாகி இருக்கிறது.

இதையும் படிங்க: பாக்., கிரிக்கெட் அணி தோல்வியடைந்த ஆவேசம்.. டிவியை உடைந்து ஆதங்கப்பட்ட ரசிகர்கள்?

இதனிடைய, உக்ரைன் நாட்டுக்கு ஆதாரவாக அமைதியாக இருந்த ஐரோப்பிய நாடுகள் ஆதரவாக களமிறங்கும் சூழல் உண்டாகி இருக்கிறது. இது அமெரிக்கா - உக்ரைன் நாடுகளின் நட்புறவில் விரிசலை ஏற்படுத்தியது.

கண்ணில் சிக்கிய இளைஞரை துரத்திப்பிடித்து, இராணுவத்தில் பணியாற்ற இழுத்து செல்லப்படும் காட்சி

அமைதி பேச்சுவார்த்தைக்கு நடத்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே கருத்து மோதலும் நிலவியது. உக்ரைன் போர் காரணமாக, தற்போது வரை அந்நாடு பெரிய இழப்புகளை சந்தித்துள்ளது.

போரை ரஷியா தொடங்கியதால், அந்நாட்டுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், அது தனது நட்பு நாடுகளுடன் வணிகம் செய்து தப்பித்துக்கொண்டது. 

இந்நிலையில், போரில் பல்லாயிரம் வீரர்களை தொடர்ந்து இழந்து வரும் உக்ரைன், தனது இராணுவத்திற்கு கண்ணில் படும் நபர்களையெல்லாம் அழைத்து போரில் ஈடுபடுத்துவதாக தகவல் வெளியையுள்ளது. 

கடந்த ஆண்டு இதுதொடர்பான வாதங்கள் எழுந்த நிலையில், சாலையில் நடந்து செல்லும் இளைஞரை உக்ரைன் இராணுவம் கட்டாயப்படுத்தி அழைத்து செல்வதாக வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

பெண் ஒருவரை இராணுவ செவிலியராக பணியாற்ற வற்புறுத்தி அழைத்துச் செல்லும் காட்சி

இதையும் படிங்க: கோமாளி, சர்வாதிகாரி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - டிரம்ப் பரபரப்பு பேச்சு.!