ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
கோமாளி, சர்வாதிகாரி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - டிரம்ப் பரபரப்பு பேச்சு.!

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை முன்னெடுத்து இருக்கிறார். அதே நேரத்தில், உக்ரைனுக்கு முன்னாள் அதிபர் பைடன் வழங்கி வந்த அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதனால் ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பின்தங்கியுள்ள நிலையில், அமைதி படையை உக்ரைனுக்கு அனுப்பி வைப்பதாக ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு அறிவித்து இருக்கிறது. உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர, சவூதி அரேபியாவில் அமெரிக்கா-ரஷ்யா உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.
ஜெலன்ஸ்கி காரணம்
இதனிடையே, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, "உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போரை தேவையில்லாமல் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார். ஜெலன்ஸி கோமாளி, சர்வாதிகாரி ஆவார். அவரே போரை நீட்டிக்க காரணம். உக்ரைன் அதிபர் பொறுப்பில் இருந்து அவரே விலக வேண்டும். உக்ரைன் - ரஷ்யா போருக்கு ஜெலன்ஸ்கி தான் முழு காரணம்" என கூறினார். இதற்கு பதிலளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா கொடுக்கும் பொய்யான தகவலை நம்பி ட்ரம்ப் பேசுகிறார். ரஷ்யாவின் தவறான தகவலை ட்ரம்ப் நம்புகிறார் என கூறினார்.
இதையும் படிங்க: கோவை: பாதாள சாக்கடை பணியில் சோகம்; இளைஞர் மணல் குவியலில் சிக்கி மரணம்.!
இதையும் படிங்க: உள்நாட்டுப்போரால் பயங்கரம்; பெண்கள், குழந்தைகள் என ஈவு-இரக்கமின்றி 200 பேர் கொலை.!