திடீரென தோன்றிய பறக்கும் வெளிச்சம்.. ஏலியன் விமானமா..?! மக்கள் அதிர்ச்சி.!
ஏலியன்கள் பற்றிய தகவல்கள் :
ஏலியன் பற்றிய பேச்சுகள் மற்றும் தகவல்கள் பல வருடங்களாக இருந்து வந்தாலும் கூட, சமீபகாலமாக வேற்று கிரகவாசிகள் குறித்த தகவல்கள் மற்றும் செய்திகள் அதிகப்படியாக பரவ துவங்கியுள்ளன. அடிக்கடி பறக்கும் தட்டு போன்றவற்றை மக்கள் காண்பதும், வினோதமான உயிரினங்களை மக்கள் காண்பதும் நிகழ்ந்து வருகின்றது.
திடீரென தோன்றிய பறக்கும் லைட்டுகள் :
அதிலும் அமெரிக்காவில் தான் இந்த நிகழ்ச்சிகள் அதிகப்படியாக நடக்கின்றன. ஹாலிவுட் படங்களில் வருவது போல விசித்திரமான பல்வேறு நிகழ்வுகள் அமெரிக்காவில் தான் நடக்கின்றது. நேற்று நள்ளிரவு நேரத்தில் தோன்றிய ஒரு காட்சி தான் தற்போது அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது நியூயார்க் வான் பகுதியில் திடீரென நான்கு லைட்டுகள் தோன்றி பறந்துள்ளது.
இதையும் படிங்க: பிரபல தாதா லாரன்ஸ் பீஷ்னோய் சகோதரர் அன்மோல் கைது?..
அமெரிக்கர்கள் அதிர்ச்சி :
ஒருவேளை அது விமானங்களாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், அவை விமானங்கள் இல்லை என்பது உறுதியாக தெரியவந்துள்ளது. அப்படி என்றால் அது வேற்றுகிரகவாசிகள் பயன்படுத்திய விமானங்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அமெரிக்கர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி நிலவுகிறது.
ஏலியன்களின் ஆதிக்கம்.?! :
சமீபத்தில் அமெரிக்காவில் ஏலியன்கள் கண்காணிப்பு துறை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏலியன்களின் ஆதிக்கம் நாளுக்கான அதிகரித்து வருகின்றனவோ என்ற தாக்கம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், ஒருவேளை சந்தேகிப்பதை போல வேற்று கிரகவாசிகள், பூமிக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் பூமியை ஆக்கிரமிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வாக்குவாதத்தில் விபரீதம்; கோடரியால் தந்தையை கொடூரமாக கொன்ற 33 வயது மகள்.!