மனித மலத்திற்கு இப்படி ஒரு மவுசா? ரூ 1.4 கோடி பணம் கொடுத்து மலம் வாங்குவதாக அறிவிப்பு.!



US Company Announce to Buy Human Waste for 500 USD Per Day 

 

மனிதனின் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள், சில காலத்திற்கு பின்னர் மக்கி உரமாக மாறுகிறது. மாட்டு சாணத்தை போல, மனித கழிவுகள் உரமாகவும் ஒருசில இடங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. 

இந்நிலையில், மனிதனின் மலத்தை ரூ.1 கோடியே 40 இலட்சம் பணம் கொடுத்து வாங்குவதாக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று அறிவித்து இருக்கிறது. அதற்கான கட்டுப்பாடுகளையும் அந்நிறுவனம் விதித்து உள்ளது. 

இதையும் படிங்க: #Breaking: நிலநடுக்கத்தால் பயங்கர நிலச்சரிவு; பப்புவா நியூ கினியாவில் மண்ணில் புதைந்து 100 பேர் பலி.!

விதிமுறைகள் இதோ

இளமையான நபராக, உடலை கட்டுக்கோப்புடன் பராமரித்து, நல் ஆரோக்யத்துடன் இருக்கும் பட்சத்தில், அப்படியான நபரின் மலத்தை ஹியூமன் மைக்ரோபஸ் நிறுவனம் ஒருமுறை வாங்க அமெரிக்க மதிப்பில் 500 டாலர் (ரூ.41000) வழங்குகிறது. 

World news

ஆண்டுக்கு ரூ.1.4 கோடி

தினமும் மலத்தை அந்நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கு கொடுக்க தயாராக இருக்கும் நபர்களுக்கு மொத்தமாக ஆனதுக்கு 180000 அமெரிக்க டாலர்கள் (ரூ.1 கோடி 40 இலட்சம்) வழங்கப்படும் எனவும் அறிவிப்பட்டுள்ளது. 

இந்த மலங்களை முறையாக பரிசோதனை செய்து, அதனை வயிற்று கோளாறு உள்ளவர்களுக்கு செலுத்தினால், அவர்களுக்கான பிரச்சனை குணமாகும் என அந்நிறு வனம் கூறுகிறது. இதற்கான ஆராய்ச்சிகள் நடந்து முடிந்துவிடும் தருவாயில் இறுதிக்கட்ட சோதனைகள் நடாத்தாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கடமான் முட்டி 70 வயது முதியவர் பலி; குட்டியுடன் புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது சோகம்.!