திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
லிவிங் டுகெதர் காதலியின் பிஞ்சு குழந்தையை துடிதுடிக்க கொன்ற காதலன்; நெஞ்சை உலுக்கும் சம்பவம்.!
அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் வசித்து வரும் நபர் எட்வர்ட். இவர் ஆமினா கேய்ட்டா என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இருவரும் லிவிங் டுகெதர் முறையில் கடந்த 3 மாதமாக ஒன்றாக வசித்து வந்ததாக தெரியவருகிறது.
கல்லீரல் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு மரணம்
ஆமினா கேய்ட்டாவுக்கு ஏற்கனவே 1 வயதுடைய குழந்தை இருக்கிறது. சம்பவத்தன்று ஆமினா வெளியே சென்றபோது, அவரின் 1 வயது குழந்தையை எட்வேர்ட் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார். இதனால் படுக்கையில் இருந்த குழந்தை கண்களில் ரத்தம் கசிந்து, கல்லீரல் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது.
இதையும் படிங்க: கடமான் முட்டி 70 வயது முதியவர் பலி; குட்டியுடன் புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது சோகம்.!
பிரேத பரிசோதனையில் கொலை அம்பலம்
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் குழந்தையின் மரணம் கொடூரமாக அமைந்தது உறுதியாக, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து எட்வேர்டை கைது செய்தனர்.
இதையும் படிங்க: ரீல்ஸ் வீடியோவால் நெற்றிப்பொட்டில் குண்டு துளைத்து 17 வயது பாடகர் பலி.!