பண்ணைபுரம் டூ லண்டன் சிம்பொனி.. இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு..



Actor Rajinikanth Wishes to Ilaiyaraaja

 

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய இசையமைப்பாளர், இந்தியாவில் உயரிய விருதுகளை பெற்ற நாயகன், மேஸ்ட்ரோ இளையராஜா தன்து இசையால் தமிழக மக்களின் மனதை வென்றெடுத்த நாயகர் ஆவர்.

தனது வாழ்நாளில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து, மக்களின் இசை ரசனையை புரிந்துகொண்ட, அதற்கேற்ப இசைப்படைப்புகளை வழங்கி மனதை கட்டிப்போட்ட இளையராஜா, பல சாதனைகளை படைத்தது வருகிறார். 

இதையும் படிங்க: தங்கக்கடத்தல் குருவியாக நடிகை.. கிடுக்குபிடிக்கு தயாராகும் அமலாக்கத்துறை..!

தற்போது இலண்டனில் நடைபெறும் சிம்பொனி நிகழ்ச்சிக்காக, அவர் வெளிநாடு சென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

இந்நிலையில், தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரம், நடிகர் ரஜினிகாந்த் இளையராஜாவுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துளார். இதுதொடர்பாக அவரின் எக்ஸ் வலைப்பக்கத்தில், "பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி  படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள்." என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #Breaking: பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி.. வீட்டின் கதவை உடைத்து மீட்ட அதிகாரிகள்., மருத்துவமனையில் அனுமதி.!