ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
"பாதி மலையை காணும்.. யார் கேள்வி கேட்பா? வயிறெல்லாம் எரியுது" - மோகன் ஜி.!

தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் கனிம வளங்கள், அதிகளவு வெட்டி எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் கன்னியாகுமரி மாவட்ட வளங்கள் கேரளாவுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட வளங்கள் கர்நாடகா வழியே பிற மாநிலத்திற்கும் நேரடியாக அனுப்பப்படுகிறது, சில அதிகாரிகளின் கண்களின் மண்ணைத்தூவி கடத்தப்படுகிறது.
நசுக்கப்படும் சமூக ஆர்வலர்களின் கைகள்
அதுமட்டுமல்லாது, மாவட்ட அளவில் இருக்கும் பல்வேறு மலைகள், வனத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத சிறிய அளவிலான குன்றுகள் குவாரி அமைக்கப்பட்டு வெடிவைத்து பெயர்த்து தகர்க்கப்பட்டு கடத்தப்படுகிறது. கனிமவளக்கொள்ளை என்பது அரசு அதிகாரி முதல் ஆளும் கட்சிகள் வரை தொடர்பு உடையது என்பதால், அதனை மக்கள் கேட்பது இல்லை. கேட்கும் சிலரும் குவாரி நடத்தும் கும்பலால் முடக்கப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: பண்ணைபுரம் டூ லண்டன் சிம்பொனி.. இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு..
எளம்பலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் எடுத்த காட்சி இது.. அனுமதி பெற்று இயங்குகிறதோ அனுமதி இல்லாமல் இயங்குகிறதோ? ஆனால் இந்த இயற்கையை அழிப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எனவே கனிமவளத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு இயற்கையை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் pic.twitter.com/gxOH3gtzUB
— Mohan G Kshatriyan (@mohandreamer) March 10, 2025
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் பகுதியில் செயல்பட்டு வரும் குவாரியில் சார்பில், அங்குள்ள மலையின் கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. பகுதிகளவு மலையை அப்படியே பெயர்த்து எடுத்து வைத்துள்ளனர். இதுதொடர்பான காட்சிகளை, பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கி வழங்கி மோகன் ஜி தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
பாதி மலை மாயம்
இதுதொடர்பான காட்சியில் அவர் பேசுகையில், "அனுமதியுடன் செயல்படுகிறதா? இல்லையா? என தெரியவில்லை. ஆனால் பகுதி மலையை காணவில்லை. சேலத்தில் இருந்து பெரம்பலூர் வழியாக அரியலூர் சென்றுகொண்டு இருக்கிறேன். பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் பகுதி இது. இயற்கை கொடுத்த பாதி மலையை காலி செய்துவிட்டனர்.
இயற்கை தந்த கொடையில் பாதி காணவில்லை. இது எங்கே சென்று முடியப்போகிறது? யார் இதனை தட்டிகேப்பது? எதிர்கால தலைமுறைக்கு எதாவது கொஞ்சம் மிச்சம் வைக்க வேண்டாமா? இயற்கையை எதிர்கால தலைமுறைக்கு கொடுக்க வேண்டாமா? பார்க்கும்போது வயிற்று எரிச்சலாக இருந்தது, அதனால் உங்களுடன் பகிருகிறேன்" என பேசினார்.
இதையும் படிங்க: தங்கக்கடத்தல் குருவியாக நடிகை.. கிடுக்குபிடிக்கு தயாராகும் அமலாக்கத்துறை..!