குடும்பத்துடன் கொலை செய்திடுவேன் - பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்.. காவல் நிலையத்தில் புகார்.!
குடும்பத்துடன் கொலை செய்திடுவேன் - பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்.. காவல் நிலையத்தில் புகார்.!
தெலுங்கு, தமிழ், ஹிந்தி திரைப்படங்களில் நடித்து முன்னணி பெற்ற பிரபல நடிகை நிதி அகர்வால். இவர் தமிழில் சிம்புவுடன் ஈஸ்வரன், உதயநிதி ஸ்டாலினுடன் கலகத்தலைவன் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.
கொலை மிரட்டல்
இதனிடையே, நிதி அகர்வால் ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், சமூக வலைத்தளம் வாயிலாக தனக்கு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுகிறார்.
இதையும் படிங்க: ஏ.ஆர் ரகுமான் இளமையாக இருப்பதற்கு காரணம் இதுதானா..! அவரே கூறிய உண்மை.!?
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தன்னை ஆபாசமாக பேசி, எனது குடும்பத்தையும் கொலை செய்திடுவதாக மிரட்டுகிறார். இதனால் அவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்பேரில் அதிகாரிகளிடம் குறிப்பட்ட மர்ம நபர் தொடர்பான விபரங்களை நடிகை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: "அஜித் சாரை வைத்து படம் இயக்கவேண்டும் என்று ஆசை.. ஆனால்" இயக்குநர் லோகேஷ் ஓபன் டாக்.!?