தலைநகரில் பயங்கரம்... ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை.!! காவல்துறை விசாரணை.!!
தலைநகரில் பயங்கரம்... ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை.!! காவல்துறை விசாரணை.!!
தலைநகர் டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை
ராஜேஷ் தன்வார் என்பவர் தெற்கு டெல்லியில் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை நடை பயிற்சிக்குச் சென்ற அவரது மகன் திரும்பி வந்து பார்த்தபோது தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷ் தன்வாரின் மகன் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சுட்டு கொலை செய்யப்பட்ட ராஜேஷ் தன்வார் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்ததால் கொடூரம்; பெண் காவலர் ஆணவக்கொலை.. கழுத்தறுத்து வெறிச்செயல்.!
தலைநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: "நம்ம ஆளுங்கள விட காதல் பெருசா.." பெண் போலீஸ் கௌரவ கொலை.!! தம்பி வெறி செயல்.!!