நள்ளிரவில் திரைப்பட பாணியில் தீ விபத்து; நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!
நள்ளிரவில் திரைப்பட பாணியில் தீ விபத்து; நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!
கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் தற்போது வரை மாதங்கள் அளவில் தொடரும் வெப்பநிலை காரணமாக, இந்திய மக்கள் வெப்பம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பீகார் உட்பட பல மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் கடுமையான அளவு மக்களை பாதித்து வருகிறது. உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.
நள்ளிரவில் தீ விபத்து
இந்நிலையில், புதுடெல்லியில் உள்ள சாகெத், பர்யவரன் காம்ப்ளக்ஸ் பகுதியில் கடந்த மே 30 - 31ம் தேதி நள்ளிரவு 01:40 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மெஹ்ருரளி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடுகளுக்கு செல்லும் எரிவாயு குழாய் இணைப்பில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க: #BigBreaking: கேமிங் மையத்தில் பயங்கர தீ விபத்து; 20 பேர் உடல் கருகி பரிதாப பலி.!
நல்வாய்ப்பாக பெரும் சேதம் தவிர்ப்பு
வீடுகளுக்கு வெளியே தீப்பிடித்து எரிந்த காரணத்தால், நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் இல்லை. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு & மீட்பு படையினர், 20 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்பகுதிகள் கியாஸ் சேவை இணைப்பை துண்டித்து துரிதமாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: வாகனத்தின் பின்புறம் தொங்கியவாறு சாகசம்; இளைஞர் தலையில் காயம்பட்டு துள்ளத்துடிக்க பலி.!