ஈரக்குலை நடுங்குதே.. கிரைண்டரில் சட்டை சிக்கி 19 வயது இளைஞர் பலி.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.!
பார்க்கவே ஈரக்கொலை நடுங்குது.. கிரைண்டரில் சட்டை சிக்கி 19 வயது இளைஞர் பலி.. நெஞ்சை நடுநடுங்க வைக்கும் காட்சிகள்.!
முன் அனுபவம் இன்றி இயந்திரத்தில் பணியாற்ற நேர்ந்தால், நம் கவனமாக இல்லாத பட்சத்தில் உடல் உறுப்புகளோ, உயிரோ பறிபோகும் ஆபத்து உள்ளது என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, வோர்லி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் சுராஜ் நாராயண் யாதவ் (வயது 19). இவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
சைனீஸ் ரெஸ்டாரண்ட்
தற்போது, வோர்லி பகுதியில் செயல்பட்டு வரும் சைனீஸ் புட் ரெஸ்டாரண்ட் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல அவர் தனது பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இதையும் படிங்க: ஐயப்பன் கோவிலில் பெரும் அசம்பாவிதம்; பக்தர் தற்கொலை.!
இதனிடையே, திடீரென நாராயண் மஞ்சூரியன் மற்றும் சைனீஸ் பெல் எனப்படும் உணவு வகைக்கான மசாலாக்களை தயாரிக்கும்போது, க்ரைண்டரில் தவறி விழுந்தார்.
சட்டை மாட்டிகொண்டு சோகம்
இயங்கிக்கொண்டு இருந்த கிரைண்டரில் அவர் இழுக்கப்பட்ட நிலையில், சில நொடிகளில் அவரின் உயிர் பிரிந்தது. இளைஞர் கிரைண்டருக்கு மிக அருகில் நின்று பணியாற்றியபோது, அவரின் சட்டை மாட்டிக்கொண்டதால் கிரைண்டருக்குள் இழுத்து தள்ளப்பட்டுள்ளார்.
கிரைண்டர் இயங்குவது குறித்து எந்த விதமான முன் அனுபவமும் இல்லாத நாரயணனை கோதேகர் தற்காலிகமாக இயந்திரத்தை இயக்க நியமித்தது இறுதியில் விபத்தில் முடிந்து இருக்கிறது.
பதறவைக்கும் விடியோவை இளகிய மனம் கொண்டோர் பார்க்க வேண்டாம்..
இதையும் படிங்க: 150 ஏக்கர் நில மோசடியை அம்பலப்படுத்திய இளைஞர் மர்ம மரணம்.. மீட்கப்பட்ட மண்டை ஓடு.!