திடீரென குறுக்கே பாய்ந்த மாடு.. காரில் மோதி இளைஞர் துள்ளத்துடிக்க பலி..!
திடீரென குறுக்கே பாய்ந்த மாடு.. காரில் மோதி இளைஞர் துள்ளத்துடிக்க பலி..!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாகூர், கன்னியக்கோவில் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன். இவரின் மகன் மோகன்ராஜ் (வயது 26). இவர் கோர்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று, சொந்த வேலையாக வெளியே சென்றவர், மாலை 06:30 மணியளவில் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார். முல்லோடை - குருவிநத்தம் சாலையில், இருசக்கர வாகனத்தில் அவர் வந்தார்.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்; சீருடையில் சாலை மறியல்.!
மாடு குறுக்கே புகுந்தது
அப்போது, பரிக்கல்பட்டு பகுதியில், சாலை சந்திப்பில் மாடு ஒன்று திடீரென இருசக்கர வாகனத்தின் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மோகன்ராஜ், எதிர்திசையில் வந்த காரின் மீது விழுந்து படுகாயமடைந்தனர்.
விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், மோகன்ராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் மோகனின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து கிருமாம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #Breaking: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை., பள்ளி, மதுபானக்கடை சூறையாடல்.. புதுச்சேரியில் பதற்றம், சாலை மறியல்.!