காம வெறி பிடித்த மாமனார்... ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள் படுகொலை.!!
காம வெறி பிடித்த மாமனார்... ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள் படுகொலை.!!
கர்நாடக மாநிலத்தில் மாமனாரின் ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருக்கும் மாமனாரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மருமகளுக்கு பலமுறை பாலியல் தொல்லை
கர்நாடக மாநிலம் ஜூலமேரா கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கய்யா. இவரது மகன் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். அவருக்கு திருமணமாகி ஜாலம்மா என்ற மனைவியும் உள்ளார். இந்நிலையில் ராமலிங்கய்யாவிற்கு தனது மருமகள் மீது தீராத ஆசை இருந்து வந்திருக்கிறது. மேலும் தனது மருமகளை பலமுறை பலாத்காரம் செய்ய முயற்சி செய்திருக்கிறார் ராமலிங்கய்யா.
கட்டையால் அடித்து கொலை
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று தனது மகன் வீட்டிற்கு சென்ற ராமலிங்கய்யா, மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அதனை தடுத்திருக்கிறார் ஜாலம்மா. மேலும் கத்தி கூச்சல் போட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ராமலிங்கய்யா அங்கிருந்த கட்டையை எடுத்து மருமகளின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜாலம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: "உனக்கு சொத்து தரமாட்டாரு.." தந்தை எரித்து கொலை.!! காதலியுடன் கைது செய்யப்பட்ட மகன்.!!
வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டை
ஜாலமாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைப் பார்த்த ராமலிங்கய்யா சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்கள் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த ஜாலம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவான மாமனாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அட பாவமே... பெத்த மகளுக்கே பாலியல் தொல்லை.!! தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்.!!